ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும், கோரிப்பாளையம், போங்கடி நீங்களும் உங்க காதலும் போன்ற படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். இந்த படங்களை அடுத்து காதல் போல என்றொரு படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து, அஞ்சலியை ஹீரோயினாக வைத்து ஒரு படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்தார். ஆனால் அந்த முயற்சி ஒர்க்அவுட் ஆகவில்லை.
அதனால் இப்போது, ஆப்ட்டான் சாப்ட்டான் பப்ளிக் பிரைவேட் லிமிடெட் என்றொரு படத்தில் டாக்டர் சீனிவாசனுடன் இணைந்து நடித்து வருகிறார் ராமகிருஷ்ணன். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாராகி வரும் இந்த படத்தில் டாக்டர் சீனிவாசனும் இன்னொரு ஹீரோவாம். ராமகிருஷ்ணனைப்போலவே அவருக்கும் ஜோடி உள்ளதாம். அதனால் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளில் இளவட்டங்களுக்கே சவால் விடும் வகையில் நடித்துள்ளாராம் சீனிவாசன். இதேபோல் மிர்ச்சி சிவா நடிக்கும் அட்றா மச்சான் விசிலு படத்திலும் இன்னொரு ஹீரோவாக நடித்து வருகிறார் டாக்டர் சீனிவாசன்.