வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
திரைப்பட நட்சத்திரங்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்களோ, இல்லையோ அவர்களது படங்கள் வெளிவருவதற்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் தங்களது ரசிகர்களுடன் 'சாட்' செய்வதை அதிகம் விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள்தான் பிரச்சனையில்லாத கேள்விகளைக் கேட்பார்கள். பிடிக்காத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்துவிடலாம். ஆனால், பத்திரிகையாளர்கள் அப்படிக் கேட்டால் எப்படி பதில் சொல்வது, எப்படி தப்பிப்பது...
த்ரிஷா நாயகியாக நடித்துள்ள 'அரண்மனை 2' படம் நாளை வெளியாவதை முன்னிட்டு தன் ரசிகர்களுடன் டிவிட்டரில் 'சாட்' செய்தார் த்ரிஷா. அப்போது ஒரு ரசிகரின் கேள்விக்கு, “ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய அதிகமான ஆவல்,” என்று சொல்லியிருக்கிறார். அதோடு, அஜித் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் நடிகர், அவருடன் எப்போது வேண்டுமானாலும் நடிக்கத் தயார்.
விஜய் எனக்கு ஸ்பெஷலான நடிகர், அவருடைய முக்கியமான வெற்றிப் படங்களில் அவர் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன். சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கும் தயக்கப்பட மாட்டேன். தனுஷ் ஒரு சிறந்த நடிகர், அவரைப் பற்றிச் சொல்வதென்றால் தனி பக்கம் ஒதுக்க வேண்டும்,” என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
ஒரு ரசிகர் த்ரிஷாவைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து கேட்ட போது, “இப்போதைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை,” என்று பதிலளித்துள்ளார்.