தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கெத்து படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைகுழு யு சான்றிதழ் கொடுத்தும், 'கெத்து' என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி வரிவிலக்கு கொடுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உதயநிதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம். கெத்து தமிழ் வார்த்தைதான் இதுகுறித்து தமிழக அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கில், 'கெத்து' என்கிற வார்தையை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது கே என்கிற முதல் எழுத்துக்கு பதிலாக ஜி என்று குறிப்பிட்டுள்ளனர். கெத்து என்பது தமிழ் வார்த்தை கிடையாது. என்று கூறினார். பதில் மனு தாக்கல் செய்த மண்டல தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரும், கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29ந் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. அரசின் சார்பில் வரிவான பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.