Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் தீபிகா!

27 ஜன, 2016 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Deepika-heavy-work-out-for-Hollywood-film

பாலிவுட் பேரழகி தீபிகா படுகோனே அடுத்த மாதம் 2ம் தேதி பிரபல ஹாலிவுட் ரேசிங் சூப்பர்ஸ்டார் வின் டீசலுடன் இணைந்து டிரிப்பள் எக்ஸ் திரைப்படத்தில் நடிக்கப்போவது உறுதியான பின்னர், அதற்கான கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


ஹாலிவுட் படம் என்பதால் கடுமையான ஆக்ஷன் காட்சிகள், ஸ்டன்ட்டுகள் இருக்கும் அதற்கு ஏற்றவாறு தனது உடற்தோற்றத்தை உறுதியாக மாற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.


தீபிகாவின் உடற்பயிற்சி நிபுணர் யாஸ்மின் கரச்சிவாலா இதுபற்றி கூறுகையில், “பிப்ரவரி 2ம் தேதி டிரிப்பள் எக்ஸ் படப்பிடிப்பு டொரான்டோ மற்றும் லாஸ் எஞ்சல்ஸில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக தீபிகா தன்னை மிகவும் வலிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதால், தினமும் பல மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்கிறார். 200 பவுண்ட் எடையை தனது காலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே பயிற்சி செய்கிறார்” என்று கூறினார்.


மேலும் அவர் தீபிகா ஒரு அதெலட் என்பதால் அவருக்கு உடற்பயிற்சி மிகவும் எளிதாகவும் விரும்பியும் செய்கிறார் என்றார்.


தீபிகாவுடன் நடிக்கவுள்ள வின் டீசலும் படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in