ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ஸ்டார்வார்ஸ் 7ம் பாகம் எதிர்ப்பார்த்ததைவிட பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று உலகமெங்கும் தனது வசூல் வேட்டையை ஆடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஸ்டார்வார்ஸ் திரைப்படத்தின் 8ம் பாகத்தை வெளியீடு செய்யும் தேதியை டிஸ்னி டிசம்பர் 15, 2017க்கு தள்ளிவைத்து விட்டது.
முன்னதாக ஜூலை மாதத்தில் வெளியீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின ஆனால், ஜானி டெப் நடிப்பில் வெளியாகும் 'பைரேட்ஸ் ஆப் த கரீபியன்: டெட் மென் டெல் நோ டேல்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 7, 2017 என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிஸ்னி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், படக்குழுவினர் மேலும் படத்திற்கான மேக்கிங் பணிகள் ஜூலைக்குள் முடியாதது தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
ஸ்டார்வார்ஸ் 7ம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பெரு வெற்றி அடைந்ததனால் ஸ்டார்வார்ஸ் 8ம் பாகத்தையும் 2017 டிசம்பர் கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வெளியிட்டால் இதே அதிர்ஷ்டம் அடிக்கும் என்று எண்ணியிருப்பார்களோ!