விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
தமிழில், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். அப்படி அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தபடியாக அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. அதையடுத்து தெலுங்கிற்கு சென்ற ராகுல் ப்ரீத் சிங் நடித்த எல்லா படங்களுமே ஹிட் அடித்ததால் இப்போது அங்கு முன்னணி ஹீரோயின் ஆகி விட்டார். ராம்சரணுடன் அவர் நடித்த புருஸ்லீ த பைட்டர் படம் தமிழில் டப் செய்து வெளியானது.
மேலும், இப்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் போன்ற மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங்கை தமிழில் நடிக்க வைக்க சிலர் அழைத்தனர். ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் அந்த படங்களின் ஹீரோ என்பதால் மறுத்து விட்டாராம் அவர். அதோடு, தமிழில் எனது அடுத்த டார்க் கெட் விஜய்-அஜித்தான். அவர்களின் படங்களில் நடிக்கதான் முயற்சி எடுத்து வருகிறேன். ஒருவேளை அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தெலுங்கு, இந்தியில் முழுக்கவனத்தை திருப்பி விடுவேன் என்று கூறிவிட்டாராம் நடிகை.