இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்த இமான் அண்ணாச்சி, தற்போது ரயில் படத்திலும் நடிக்கிறார். முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் இந்த கதையில், டிடிஆர் வேடத்தில் நடிக்கிறார் இமான் அண்ணாச்சி. அதேசமயம் படத்தில் காமெடியனும் இவர்தானாம். அதனால் பயணிகளிடம் இவர் டிக்கெட் பரிசோதனை செய்ய வரும்போது இவர் கேட்கும் கேள்விகளுக்கு பயணிகள் எடக்குமடக்காக பதில் கொடுப்பதை காமெடியாக்கியிருக்கிறாராம் பிரபுசாலமன்.
மேலும், அதே ரயிலில் டிக்கெட் இல்லாமல் வித்அவுட்டில் பயணிப்பவர்களிடம் அவர் அல்லோல் படுவதும், நடுகாட்டுக்குள் செயினை இழுத்து ரயிலை நிறுத்தி விட்டு அவர்கள் ஓட்டம் பிடிப்பதையும் காமெடியாக்கியிருக்கிறார்களாம். அதோடு ரயிலுக்குள் கேன்டீன் பாயாக குறுக்கும் மறுக்கும் அலைந்து கொண்டிருக்கும் தனுசுக்கும், இமான் அண்ணாச்சிக்கும் இடையேகூட நிறைய காமெடி சீன்கள் உள்ளதாம். அதனால் இதற்கு முன்பு நடித்த படங்கள் மெயின் காமெடியனாக நடிக்காத போதும், இந்த ரயில் படத்தில் நான் ஷோலோ காமெடியனாக நடித்திருக்கிறேன் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார் இமான் அண்ணாச்சி.