Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடியரசு தினத்தில் டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

27 ஜன, 2016 - 10:02 IST
எழுத்தின் அளவு:
Kamal-joints-in-Twitter

தமிழ்த் திரையுலகத்தில் எந்த ஒரு தொழில் நுட்ப மாற்றத்துக்கும் முன்னோடியாக இருப்பவர் கமல்ஹாசன். ஆவிட் எடிட்டிங், டிஜிட்டல் ஒளிப்பதிவு, ஆரோ ஒலியமைப்பு என பல விஷயங்களை தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தியவர். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கொண்டிருக்க கொஞ்சம் தாமதமாகவே டுவிட்டரில் நுழைந்திருக்கிறார் கமல்ஹாசன். அவர் ஏற்கெனவே ஃபேஸ்புக், யு டியூப் ஆகியவற்றில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் டிவிட்டரில் நேற்று தான் தனி கணக்கு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன். அவரின் டுவிட்டர் முகவரி இதுதான்... https://twitter.com/ikamalhaasan


நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கணக்கில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கமல்ஹாசனை தொடர ஆரம்பித்துள்ளனர். முதல் பதிவாக நமது நாட்டின் தேசிய கீதம் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடியுள்ள அந்த வீடியோவை தன்னுடைய முதல் பதிவாகப் போட்டுள்ளார். அத்துடன் இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது பதிவாக டிவிட்டருக்கு வந்துள்ள தன்னை வாழ்த்திய மகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் நீண்ட இடைவெளி விட்டு தான் டிவிட்டரில் பதிவுகளைப் போடுவார். ஆனால், கமல்ஹாசன் அப்படி இடைவெளி விடமாட்டார் என எதிர்பார்க்கலாம். அஜித், விஜய் ஆகியோர் டுவிட்டருக்கு வர மாட்டார்களா என அவர்களுடைய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in