சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரம்மி, காக்கா முட்டை உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது தந்தை ராஜேஷ், தாய்மொழியான தெலுங்கில் சுமார் 25 படங்களில் நடித்தவர். அதனால் தெலுங்கில் என்ட்ரியாக வேண்டும் என்பதுதான் ஐஸ்வர்யா ராஜேஷின் விருப்பமாகவும் இருந்தது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது தமிழில்தான். அதனால் முதலில் சின்ன படங்களாக, செகண்ட் ஹீரோயினாக நடித்து வந்த அவர், தற்போது இரண்டாம் தட்டு ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில், தற்போது அவர் கைவசம் 9 படங்கள் வரை உள்ளன.
மேலும், இப்படி தனது மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கும்போதே தெலுங்கிலும் காலூன்றி விட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி அவர் சில படங்களில் நடிக்க முயற்சி எடுத்தபோது, அவர் தமிழ்நாட்டு நேட்டி விட்டி கதைகளுக்கே பொருத்தமானவராக இருக்கிறார். தெலுங்கு படங்களில் நடிப்பதற்கேற்ற நிறம் அவரிடம் இல்லை என்று கூறி விட்டார்களாம். ஆக, தெலுங்கு சினிமாவில் கலர்புல்லான நடிகைகளுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இப்போது வாரம் ஒருமுறை பாடி பாலீஸ் செய்து கொண்டிருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.