'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்துள்ள நாணாகு பிரேமதோ திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வசூலில் லாபம் ஈட்டி வருகின்றது. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் போல் அமெரிக்காவிலும் அதிக வசூல் செய்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜுனியர் என்.டி.ஆர், காதல் காட்சிகளில் காமிராவின் முன்னால் நடிக்க நடுக்கமாகவுள்ளதாகக் கூறினார். இதனை அமோதித்த நாணாகு பிரேமதோ நாயகி ராகுல் ப்ரீத்தி சிங் ஜுனியர் என்.டி.ஆர் காதல் காட்சிகளில் நடிக்க அதிக தயக்கம் காட்டுவதாகக் கூறினார்.
ஜுனியர் என்.டி.ஆரின் மனைவி லக்ஷ்மி ப்ரணதி, ஜுனியர் என்.டி.ஆருக்கு தன்னிடமே ரொமான்ஸ் செய்ய தெரியாது எனக் கூறி ஜுனியர் என்.டி.ஆரை நெளிய வைத்துள்ளார். ஜுனியர் என்.டி.ஆரின் காதல் மனைவி ப்ரணதியின் இந்த குற்றசாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.