ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு முன் தமிழில், பாக்யராஜ் இயக்கிய 'சின்னவீடு' படத்தில் பாக்யராஜின் மனைவியாக கதாநாயகியாக நடித்தவர் தான் ஊர்வசியின் அக்காவான கல்பனா. இந்தப்படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன் தமிழில் கல்பனா அறிமுகமான முதல் படம் இதுதான். கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் கூட, கல்பனா மற்ற எல்லா நடிகைகளையும் போல ஸ்லிமாகத்தான் இருந்தார். ஆனால் அவரது கேரக்டருக்காக குண்டாக வேண்டும் என பாக்யராஜ் சொல்லவே, நன்றாக சாப்பிட்டு குண்டானார். படம் வெளியாகி சூப்பர்ஹிட்டானது.
ஆனால் கல்பனாவால் தனது உடல் எடையை ஓரளவுக்கு குறைக்க முடியவில்லை. அவரால் பழைய உருவத்தை பெறவே முடியவில்லை. அதன் பின் பல வருடங்கள் அவர் குண்டாகவே இருந்தார். அதனாலேயே ஆறேழு வருடங்கள் கழித்து அதே சின்னவீடு கான்செப்ட்டுடன் உருவான கமல் நடித்த 'சதிலீலாவதி' படத்திலும் அவரையே ரமேஷ் அரவிந்தின் குண்டு மனைவியாக நடிக்க வைத்த கொடுமையும் நடந்தது.
இதில் சோகம் என்னவென்றால் இவர் கடைசியாக மலையாளத்தில் நடித்த 'சார்லி' படத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பார். இனி எதற்காக உயிர்வாழ வேண்டும் என நினைத்து யாரும் எதிர்பாராத விதமாக கடலில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்வார். அதேபோல நிஜத்திலும் இதய வால்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த கல்பனாவின் மரணம் யாரும் எதிர்பாராத விதமாக, உதவி செய்வதற்கு ஆளில்லாத சூழலில் தான் நிகழ்ந்துள்ளது.