தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நாயகனாக அறிமுகமான படம் கும்கி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லட்சுமிமேனன் நடித்தார். அவருக்கும் அதுதான் முதல் படம். அப்படி அவர்கள் இரண்டுபேரும் இணைந்த கும்கி படம் சூப்பர் ஹிட்டானது. ஆனபோதும், பின்னர் பிரபுசாலமன் படத்திலோ அல்லது விக்ரம் பிரபுவுடனோ லட்சுமிமேனன் நடிக்கவில்லை. ஆனபோதும், வெவ்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். அதிலும் அஜீத்தின் வேதாளம் படத்திற்குபிறகு பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது ஜெயம்ரவியுடன் அவர் நடித்த மிருதன் ரிலீசாகயிருக்கும் நிலையில், அடுத்தபடியாக ஜெமினிகணேசன் படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது விஷாலை வைத்து மருது படத்தை இயக்கி வரும் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்கிறார் லட்சுமிமேனன். அப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மேலும், தான் இயக்கிய குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களில் லட்சுமிமேனனை நடிக்க வைத்த முத்தையா, மருது படத்திலும் அவரைதான் நடிக்கவைக்கயிருந்தார். ஆனால், விஷாலின் தடுத்ததால் இப்போது ஸ்ரீதிவ்யா அப்படத்தில் நடிக்கிறார். இருப்பினும், தனது செண்டிமென்ட் நாயகியான லட்சுமிமேனனை விட மனசில்லாத முத்தையா, இந்த படத்தைத் தொடர்ந்து விக்ரம்பிரபுவை வைத்து தான் இயக்கும் படத்திற்கு இப்போதே லட்சுமிமேனனை அட்வான்ஸ் புக்கிக் செய்து விட்டார்.