ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் ஒவ்வொரு வருடம் அறிவிக்கப்படும்போதெல்லாம் ரஜினிக்கு விருது வழங்கப்பட உள்ளதாக வதந்திகள் கிளம்பும். இந்த வருடமும் அப்படியே வதந்தி கிளம்பியது. அவருக்கு பத்மவிபூஷன் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கடந்த சில தினங்களாகவே சமூகவலைத்தளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் தகவல்கள் பரவின.
இந்த முறை உண்மையிலேயே ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், பத்ம விபூஷண் விருது பெறுவதற்காக மிகுந்த பெருமிதமாக உணர்கிறேன் என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
என் நேசத்துக்குரிய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் என் மனப் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் தெரிவித்துள்ள ரஜினி அவரை வாழ்த்திய ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின், நடிகை குஷ்பு ஆகியோரு நன்றி தெரிவிக்கவும் மறக்கவில்லை.
ட்விட்டர் கணக்கு தொடங்கிய பிறகு தொடர்ந்து அப்டேட் செய்யாத ரஜினி நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ட்விட்டர் பக்கம் வந்துள்ளார்.
ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் ஆனந்தக்கூத்தாடி வரும் அதே நேரம், தேர்தல் நெருங்குகிற நேரத்தில் ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது இன்னொரு பக்கம் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக, வழங்கப்பட்ட அச்சாரமா என்றும் கேள்விகள் எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள்.