ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய தேதியில் ஹீரோக்கள் கேட்கும் கோடிக்கணக்கான சம்பளத்தைக் கொடுத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாருமில்லை. சில வருடங்களுக்கு முன்புவரை தொடர்ந்து படம் தயாரித்து வந்த பல தயாரிப்பாளர்கள் தற்போதைய பட்ஜெட்டை மனதில் வைத்து படம் தயாரிக்காமலே இருக்கின்றனர். எனவே ஹீரோக்கள் சொந்தப்படம் எடுக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
கமல், ரஜினி, சூர்யா, தனுஷ், விஷால், ஆர்யா, சந்தானம் போன்ற முதல்வரிசை நடிகர்கள் மட்டுமல்ல இரண்டாம்நிலையில் உள்ள ஹீரோக்களும் சொந்தப்படம் எடுத்தால் மட்டுமே இனி திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இப்படியொரு டிரெண்ட் உருவாகிவிட்டதை இனிமேல் தவிர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அதர்வா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் தற்போது சொந்தப்படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த வரிசையில் தற்போது விஷ்ணு விஷாலும் சேர்ந்துள்ளார். வெள்ளைக்காரதுரை படத்தை அடுத்து எழில் இயக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட உள்ளது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை இயக்குநர் எழில் உடன் இணைந்து விஷ்ணு விஷால் சினிமாஸ் என்ற தன்னுடைய சொந்தப் பட நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் விஷ்ணு விஷால்.