பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆடுகளம் படத்திற்கு தேசிய விருதினை வென்று பாலிவுட் படமான ராஞ்சனா படத்தில் தனது நடிப்பின் மூலம் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்தார் நடிகர் தனுஷ். ராஞ்சனாவைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பால்கி இயக்கத்தில் ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு ஷமிதாப் படம் மூலம் தனுஷுக்கு வந்தது. தற்போது, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட் பட வாய்ப்பு நம்ம ஊர் டங்கமாரிக்கு வந்துவிட்டது.
ஆம், பிரபல பிரெஞ்ச் நாவலான “த எக்ஸ்ட்ராடனரி ஜர்னி ஆப் த பகீர் உ காட் டிராப்ட் இன் ஆன் இகியா கப்போர்ட் ” திரைப்படமாக உருவாக இருக்கிறது. அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகை கில் பில் புகழ் உமா துர்மன் மற்றும் அலெக்ஸ்ண்ட்ரா தட்டாரியோவுடன் இணைந்து நடிக்க உள்ளார் நம்ம சுள்ளான்.
பிரபல இரான் மற்றும் பிரென்ஞ்ச் படங்களை இயக்கிய இயக்குனர் மர்ஜானே சட்ராபி இப்படத்தை இயக்கவுள்ளார். நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள காட்சிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.