ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து "சீயான்" விக்ரம் அடுத்து, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு "ராஜபாட்டை" என்று பெயரிட்டுள்ளனர். "வெண்ணிலா கபடிக்குழு", "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" என்று ஒவ்வொரு படத்திற்கு வித்யாசமான படங்களை கொடுத்து கொண்டு வரும் டைரக்டர் சுசீந்திரன், அடுத்து விக்ரம்மை வைத்து ஒரு படம் பண்ணப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடிக்கிறார். இவர்கள் தவிர தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் வேந்தன் என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வந்தது. ஆனால் இப்போது படத்திற்கு ராஜபாட்டை என்று பெயரிட்டுள்ளனர். கூடவே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டெக்னீசியன்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் மெல்லிய காதலையும் சேர்த்துள்ளனர். எஸ்.பி.கிரியேசன்ஸ் சார்பில் பிரதீஸ் - சந்தோஷ் தயாரிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜூன் 7ம் தேதி முதல் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. படம்முழுக்க சென்னையிலேயே படமாக்கப்பட இருக்கிறது.