இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டாக்டர் சீனிவாசன் ஒரு பட விழாவுக்கு வருகிறார் என்றால் அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக அவரது ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு பெரிய கூட்டம் முன்பே வந்து அவருக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். அவர் என்ட்ரி ஆனதும் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அதனால் சீனிவாசன் விழா அரங்கிற்கள் வந்து விட்டார் என்றதும் அங்கே சலசலப்பு ஏற்படும்.
அதோடு, மேடையில் பேசுபவர்கள் அவருடைய பெயரை உச்சரித்தாலே எதிரில் இருக்கும் அவரது ரசிக கோடிகள் பலத்த கரகோஷம் எழுப்புவார்கள். அதோடு அவர் பேசும்போது அரங்கே அதிரும் அளவுக்கு பலத்த கைதட்டல் கொடுத்து விழாவுக்கு வந்திருக்கும் விஐபிக்களை அதிர்ச்சி அடைய செய்வார்கள்.அதைப்பார்த்து, சந்தானம் உள்ளிட்டவர்கள், பவர்ஸ்டார் விழாவுக்கு வரும்போதே லாரி நிறைய ஆட்களை கொண்டு வந்து இறங்கி விட்டார். அதனால்தான் இவ்வளவு கைட்டல் என்று கிண்டல் செய்வார்கள்.
ஆனால், சமீபகாலமாக அந்த பில்டப்களை குறைத்து விட்டார் சீனிவாசன். சினிமா விழாக்கள், படப்பிடிப்பு தளங்களுக்கு தன்னுடன் ஓரிரு உதவியாளர்களை மட்டுமே அழைத்து வருகிறார். இதனால் சக நடிகர்கள் டாக்டர் சீனிவாசனை கிண்டல் செய்வதும் இப்போது குறைந்து விட்டது.