'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இது நம்ம ஆளு படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை வாங்கிய பிறகு அந்தப் படம் எப்படியும் வெளிவந்து விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. டி.ஆரின் சொந்தத் தயாரிப்பான இது நம்ம ஆளு படத்தை வாங்க எந்த வினியோகஸ்தரும் முன் வரவில்லையாம். அதிலும் பீப் பாடல் சர்ச்சைக்குப் பிறகு தியேட்டர்காரர்களே படத்தைத் திரையிட ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். அந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் படத்தைத் திரையிட்டால் தேவையில்லாத சம்பவங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றவிட்டார்.
இதனிடையே, சிம்பு அவருக்கு நெருக்கமான சிலரிடம் படத்தின் வியாபாரத்தைப் பற்றி 50 கோடி, 60 கோடி என அளந்துவிட்டிருக்கிறார்கள். அதையும் நம்பி சிலர் படம் 60 கோடிக்கு வியாபாரம் என்றெல்லாம் தகவல்களைப் பரப்பி வருகிறார்களாம். ஆனால், அப்படியெல்லாம் படம் வியாபாரம் ஆகவில்லை என்பதுதான் உண்மை.
இதனிடையே, சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி இது நம்ம ஆளு படத்தின் இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.