பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
தமிழில் சிம்பு நடித்த 'அலை', மாதவன் நடித்த 'யாவரும் நலம்' படங்களை இயக்கிய விக்ரம் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் '24'. சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கம் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஒரு 'சயின்ஸ் ஃபிக்ஷன்' படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் அசத்தலான டிசைனில் இரு தோற்றங்களில் சூர்யா அந்த டிசைன்களில் இடம் பெற்றிருந்தார்.
அதற்கடுத்து புத்தாண்டை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பார்வையாக மேலும் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டார்கள். அவற்றில் காதல் நாயகனாக ரொமான்டிக் லுக்குடன் இருந்தார் சூர்யா. இன்று '24' படத்தின் மூன்றாவது போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்கள். இதில் வயதான தோற்றத்தில் யார் என்றே புரிந்து கொள்ள முடியாத கொஞ்சம் விகாரமான தோற்றத்தில் இருக்கிறார் சூர்யா. '24' படத்திற்காக மூன்று முறை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் ஒவ்வொரு விதமாக இருக்கும் சூர்யாவால் படத்திற்கு இப்போதே ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இடையில் சூர்யாவை சிங்க முகத் தோற்றத்துடன் டிசைன் செய்து வெளியிடப்பட்ட 'எஸ் 3' படத்தின் போஸ்டருக்கு பிராயச்சித்தமாக இன்று வெளியிடப்பட்ட போஸ்டர் இருக்கிறது என்று கூட தாராளமாகச் சொல்லலாம்.