தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லயோலா கல்லூரியின் பேராசியர் ராஜநாயகம் தலைமையில் மக்கள் ஆய்வு குழுவினர் கடந்த 7ந் தேதி முதல் 19ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடத்தினர். இதில் அடுத்த முதல்வர் யார்? எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்பது மாதிரியா பொது கேள்விகளுடன் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
இதன் முடிவில் அஜித்தான் எங்களுக்கு பிடித்த நடிகர் என்று 16 சதகிவிதம் பேர் தெரிவித்துள்ளனர், ரஜினியை 15.9 சதவிகிதம் பேருக்கு பிடித்துள்ளது. கிட்டத்தட்ட இருவருக்கும் சமமான மதிப்பீடுகள் கிடைத்துள்ளது. விஜய்யை பிடிக்கும் என்று 9 சதவிகிதம் பேரும், 5.9 சதவிகிதம் பேர் கமலையும், சூர்யாவை பிடிக்கும் என்று 4.3 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையானவர்கள் இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? என்று கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.