தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் அசின். அவருக்கும் பிரபல மொபைல் கம்பெனி அதிபரான ராகுல் சர்மாவுக்கும் கடந்த 19ம் தேதி டெல்லியில் காலை கிறிஸ்துவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
நேற்று மும்பையில் திரையுலக நண்பர்களுக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், அசின் முதலில் பிரபலமடைந்த தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைந்த அளவே கலந்து கொண்டதாகத் தெரிகிறது. பலருக்கு அசின் அழைப்பு விடுக்கவில்லை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
நேற்றைய திருமண வரவேற்பில் நடிகர்கள் மாதவன், ஜெயம் ரவி, நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்ட ஒரு சில புகைப்படங்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா உட்பட மற்றவர்கள் எந்த வாழ்த்துகளையும், புகைப்படங்களையும் டிவிட்டரில் இதுவரை பகிரவில்லை.