Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகளின் சிவகார்த்திகேயன் செண்டிமென்ட்!

24 ஜன, 2016 - 09:26 IST
எழுத்தின் அளவு:
Actress-sentiment-of-Sivakarthikeyan

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளில் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஒரே படத்தில் பிரபலங்களாகி விட்டனர். அதாவது, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் அதற்கு முன்பே விதார்த்துடன் காட்டுமல்லி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதனால் தமிழில் முதல் படமே கிடப்பில் கிடக்கிறதே என்று அவர் பெரும் கவலையில் இருந்தபோதுதான், வருத்தப்படாத வாலிபர் சங்கம் கிடைத்தது. அதோடு அந்த படம் சூப்பர் ஹிட்டாகவும் அமைந்தது. அதையடுத்து பல படங்களில் கமிட்டானார் ஸ்ரீதிவ்யா.


அதேபோல், தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து முதலில் வெளியான இது என்ன மாயம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் நடித்த முதல் படமே தோல்வியடைந்ததால் இந்த செண்டிமென்ட் தன்னை தொடருமோ என்று அவர் உள்ளூர குழப்பத்தில் இருந்தபோதுதான், ரஜினிமுருகன் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. ஆக, கீர்த்தி சுரேஷ் மீது அதிருப்தியில் இருந்தவர்கள்கூட இப்போது அவரை ராசியான நடிகையாக பார்க்கத் தொடங்கி விட்டனர். அதனால் அடுத்தடுத்து சில புதிய படங்களில் வேகவேகமாக கமிட்டாகி வருகிறார் அவர்.


ஆக, சிவகார்த்திகேயனுடன் நடித்தால் ஹிட் பட நடிகையாகி விடலாம் என்கிற நம்பிக்கை கோடம்பாக்க நடிகைகள் மத்தியில் நிலவத்தொடங்கியிருக்கிறது. அதனால், மார்க்கெட்டில் தள்ளாடிக்கொண்டு கிடக்கும் மேலும் சில நடிகைகளும் சிவகார்த்திகேயனின் புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in