ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் நடிக்க வந்து 12 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டபோதிலும், நானும் ரவுடி படத்தில்தான் முதன்முதலாக தனக் குத்தானே டப்பங் பேசினார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து தெலுங்கு நடிகையான ஸ்ரீதிவ்யா தற்போது தான் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து இந்தி நடிகையான தமன்னா, விஜயசேதுபதியுடன் தான் நடித்து வரும் தர்மதுரை படத்திற்காக முதன்முதலாக டப்பிங் பேச தயாராகிக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தமன்னா 2006ல் கேடி படம் மூலம் என்ட்ரியானார். அடுத்தடுத்து படங்கள் கிடைத்ததால் தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தவர், விஜய், அஜீத், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார். மேலும், படவிழாக்களில் சுத்தமான தமிழில் பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியும் வருகிறார். அதைப்பார்த்துதான் அவரை தர்மதுரை படத்தில் டப்பிங் பேசுமாறு கூறியிருக்கிறார் சீனுராமசாமி.
ஆனால், அப்படி அவர் பேசப்போவது மதுரை தமிழ் என்பதால், இப்போது அங்கு முகாமிட்டு நடித்துவரும் தமன்னா, இயக்குனர் சொல்லும் மதுரை தமிழை நன்றாக உள்வாங்கி பேசி நடிக்கிறாராம். அதோடு, மற்ற நேரங்களில் அந்த யூனிட்டில் உள்ள மதுரைவாசிகளிடமும் பேசி பயிற்சி எடுக்கிறாராம். தமன்னாவின் இந்த ஈடுபாடு தர்மதுரை யூனிட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.