'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நேரம் பட நாயகன் நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா, மடோனா ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். அவர்கள் மூன்று பேரின் நடிப்பும் பேசப்பட்டதால் மலையாளத்தில் பிசியானது மட்டுமின்றி, தமிழ், தெலுங்கிலும் புதிய படவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இதில், அந்த மூன்று நடிகைகளில் ஒருவான மடோனா தற்போது விஜய சேதுபதி நடித்துள்ள காதலும் கடந்து போகும் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அவரைத்தொடர்ந்து சாய் பல்லவி, கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கயிருக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறாராம். ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நித்யாமேனன், ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்தது. பின்னர் அவர்கள் விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்போது சாய் பல்லவி நடிப்பதாக சொல்கிறார்கள். இதற்கான ஆடிசன் சமீபத்தில் நடந்துள்ளதாம்.