ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமலுடன் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்தவர் பரத் ரெட்டி, ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோய் நிபுணராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பரத் ரெட்டி, தமிழிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். குணசித்திர வேடங்களில் நடித்து வந்த பரத் ரெட்டி சோலோ ஹீரோவவாக நடித்துள்ள படம் 'பயம் ஒரு பயணம்'. மணிசர்மா இயக்கி உள்ளார். விசாகா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் பணிகளை கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
பின்னர் கமல் கூறியதாவது: டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர் என்றாலும், சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. உன்னை போல் ஒருவன் படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார். அவர் நடிப்பில் உருவான் பயம் ஒரு பயணம் படத்தின் காட்சிகளை பார்த்தேன். அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப்படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும், அவருடன் திறமையாக பணியாற்றிய பயம் ஒரு பயணம் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.