‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து, தில்லுக்கு துட்டு என்ற படத்தில் நடித்து வரும் சந்தானம், கடந்த சில தினங்களாக சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கே.பாலசந்தரின் கதை வசனத்தில் உருவான சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் நாயகனாக நடித்திருந்தார். அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.
அந்த செண்டிமென்ட் காரணமாகவே அதே டைட்டீலில் மீண்டும் நடிக்கும் சந்தானம், நாகேஷின் சில டயலாக்குகளையும் சரியான இடங்களில் இலைமறை காய்மறையாக ரிப்பீட்டு செய்கிறாராம். நாகேஷை மீண்டும் இன்றைய ரசிகர்களுக்கு நினைவுபடுத்தக்கூடிய டைட்டீல் என்பதால், இந்த படத்தில் நாகேஷ் பேமிலியை சேர்ந்தவர்களை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கு என்று கருதிய சந்தானம், நாகேஷின் பேரனான கஜேஷை இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைக்கிறாராம். ஆனந்தபாபுவின் மகனான இவர் கற்கண்டு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர்.