‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
காமெடியனாக தொடர்ந்து நடித்து வந்த கஞ்சாகருப்பு, வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகனாக நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்தது. அதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அதன்காரணமாக அவரது காமெடி மார்க்கெட்டும் சரிந்து போனது. அதனால் சரிவர படங்கள் இல்லாமல் இருந்து வந்த அவர், தற்போது சில புதிய படங்களில் கமிட்டாகி மீண்டும் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தில் விஜயசேதுபதியின் நண்பராக படம் முழுக்க வரும் காமெடி வேடத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இதுபற்றி கஞ்சா கருப்பு கூறுகையில், இந்த தர்மதுரை படம் எனக்கு ஒரு பெரிய ரீ-என்ட்ரியாக அமையும். படத்தில் காமெடி மட்டுமின்றி குணசித்ர வேடங்களும் உள்ளது. அதனால் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து வருகிறேன். அதோடு, இந்த படத்தின் நாயகன் விஜயசேதுபதி ரொம்ப நல்ல பிள்ளையாக இருக்கிறார். அண்ணன் அண்ணன் என்று என் மீது அன்பை செலுத்துகிறார். இதற்கெல்லாம் மேலாக, ஸ்பாட்டில் நான் உட்கார்ந்திருந்தால் என் எதிரே உட்காரவே மறுக்கிறார். அந்த அளவுக்கு வயதில் பெரியவர்களை மதிக்கக்கூடிய நடிகராக இருக்கிறார். அவர் அப்படி சொல்வது எனக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் அவர் ஸ்பாட்டுக்கு வந்தால் நான் உட்காரவே மாட்டேன். அதோடு, இந்த தர்மதுரை படம் விஜயசேதுபதியை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும். அந்த அளவுக்கு வித்தியாசமான கதாநாயகனாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்கிறார் கஞ்சா கருப்பு.