ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ஹிந்தி 'கஜினி' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கும் வெற்றி கொடி நாட்டினார். முதல்படத்தையே அமீர்கானை கொண்டு இயக்கியவர், அடுத்தப்படியாக துப்பாக்கி ரீ-மேக்கான 'ஹாலிடே' படத்தை அக்ஷ்ய் குமார் கொண்டு இயக்கி வெற்றி பெற்றார். தற்போது சோனாக்ஷி சின்ஹாவை கொண்டு தமிழில் வெற்றி பெற்ற 'மெளன குரு' படத்தை ஹிந்தியில் 'அகிரா' என்ற பெயரில் ரீ-மேக் செய்து வருகிறார்.
இந்நிலையில், முருகதாஸ் அடுத்தப்படியாக சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். தற்போது சல்மான் கான், ''சுல்தான்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு முருகதாஸ் படத்தில் நடிக்கிறாராம் சல்மான். சல்மான்கானுக்காக ஒரு கதையை முருகதாஸ் தயார் செய்து இருப்பதாகவும், இப்படத்தின் ஷூட்டிங்கை இந்தாண்டு இறுதியில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.