பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, விரைவில் ஹாலிவுட்டிலும் முத்திரை பதிக்க உள்ளார். விரைவில் துவங்க உள்ள ஹாலிவுட் படமான, 'டிரிபிள் எக்ஸ் - தி ரிட்டர்ன் ஆப் ஜேண்டர் கேஜ்' படத்தில் வின் டீசல் உடன் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக சமீபத்தில் வின் டீசலையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் ஹாலிவுட் படத்தில் நடிப்பது பற்றி தீபிகா கூறியதாவது... ஹாலிவுட் படத்தில் நடிப்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதேசமயம் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஹாலிவுட் படத்தில் நான் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்படத்தில் என்னை தேர்ந்தெடுக்க காரணம் என் சினிமா பின்னணி தான். நிச்சயமாக நான் சிறப்பாக நடிப்பேன், ரசிகர்களும் அதை விரைவில் பார்ப்பீர்கள் என்று கூறியுள்ளார்.