ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஆண்டு உலகையே ஆட்டிவைத்த ஹாலிவுட்டின் பேரழகி ஜெனிபர் லாரன்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்திலே தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். ஃபீடல் கேஸ்ட்ரோ என்ற பெயரை அறியாதவர் யாரும் இல்லை. அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'டியர் ஃபீடல்' என்ற தலைப்பில் உருவாக உள்ளது. ஃபீடலின் காதலியான மரீட்டா லோரன்ஸ் கதாபாத்திரத்தில் தான் ஜெனிபர் நடிக்க உள்ளார்.
மரீட்டாவின் பார்வையில் தான் ஃபீடல் கேஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் பயணிக்க உள்ளதாம். தனது 19வது வயதில் மரீட்டா ஃபீடலை சந்திக்கிறார். அவர்களுக்குள் மலரும் காதல், அவர்களின் பிரச்சனைகள் பற்றிய உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி ஜெனிபர் லாரன்ஸின் ஜாய் திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பையும், கோல்டன் குளோப் விருதினையும் வாரி வழங்கியது. ஆஸ்கர் நாமினேஷனிலும் அவரது பெயர் இடம்பிடித்துள்ளது. இந்த ஆண்டும் அதே வெற்றி ஜெனிபரை தொடரும் என்ற எதிர்ப்பார்ப்பு ஹாலிவு ரசிகர்கள் மனதில் அதிக அளவில் உள்ளது.