'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சமூகத்துக்கு பயன்படும் வகையிலான படங்களை மட்டுமே எடுப்பேன் என பிடிவாதமாக படங்களை இயக்கிவருபவர் மலையாள இயக்குனர் டாக்டர் பைஜூ. அதனாலேயே தேசிய விருது, மாநில அரசு விருது, சரவதேச திரைப்பட விருதுகள் என பலவற்றை வாரி குவித்து வருகிறார் பைஜூ. இவர் வாங்கிய விருதுகளின் பட்டியலை அப்டேட் பண்ணும் விக்கிபீடியாவே மிரண்டுபோய் நிற்கிறது. சரி.. விஷயத்துக்கு வருவோம், கடந்த வருட இறுதியில் என்டோசல்பான் கொடூரத்தை சொல்லும் 'வலிய சிறகுள்ள பட்சிகள்' படத்தை வெளியிட்ட இவர் தனது அடுத்த படத்தில் வனத்துறை மற்றும் அதுசார்ந்த மனித உரிமை மீறலை பற்றிய கதையை படமாக எடுக்கிறார்.
இதில் கதாநாயகனாக நடிப்பவர் இந்திரஜித். ஆம்... நடிகர் பிருத்விராஜின் அண்ணன் தான்.... ஏற்கனவே 'வீட்டிலுக்குள்ளே வழி', மற்றும் தேசியவிருது பெற்ற 'ஆகாசத்திண்டே நிறம்' ஆகிய படங்களில் இவருக்கும் டாக்டர் பைஜூவுக்கும் கெமிஸ்ட்ரி நல்லவிதமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இந்த புதிய படத்தில் இந்திரஜித்துக்கு ரப் அன்ட் டப்பான போலீஸ் அதிகாரி வேடம். அதாவது 'லெப்ட் ரைட் லெப்ட்' படத்தில் ஏற்று நடித்தாரே அந்த மாதிரி. பிருத்விராஜ் போலீஸ் யூனிபார்முக்கு ரெஸ்ட் கொடுக்கும் நேரமெல்லாம் அதை எடுத்து அணிந்து கொள்வார் இந்திரஜித். தற்போது ராஜேஷ் பிள்ளை டைரக்சனில் இவர் நடித்து வரும் 'வேட்ட' படத்திலும் இவருக்கு போலீஸ் கமிஷனர் வேடம் தானாம்.