ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
'நான் கடவுள்' படத்தின் வரவேற்புக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் குறிப்பிடும்படியான நடிகராக ஆர்யா பெயர் பெற்றார். தொடர்ந்து 'மதராசப்பட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன்' ஆகிய படங்கள் அவரது மார்க்கெட்டை நிலையாக வைத்திருந்தன. ஆனால், அதன் பின் அவர் நடித்து வெளிவந்த ''வேட்டை, சேட்டை, ஆரம்பம், இரண்டாம் உலகம், மீகாமன், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி” என ஒன்பது தோல்விப் படங்கள் அவரது மார்க்கெட்டைப் பதம் பார்த்தன. இடையில் வந்த 'ராஜா ராணி' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது.
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'பெங்களூர் நாட்கள்' படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இதையடுத்து தொடர்ந்து அவர் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சில படங்களின் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். 'பிரேமம்' புகழ் நிவின் பாலி நடித்து மலையாளத்தில் வெளிவந்த 'ஒரு வடக்கன் செல்ஃபி' படத்தின் தமிழ் ரீமேக்கிலும், திலீப் நடித்து வெளிவந்துள்ள '2 கன்ட்ரீஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளாராம்.
நேரடிக் கதைகளில் நடித்து தோல்வியைச் சந்திப்பதை விட தற்போதைக்கு மற்ற மொழிகளில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்கில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்த முடிவாம்.