ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடியனாக நடித்தவர்கள் ஹீரோவாக நடிப்பதும்.... ஹீரோவாக நடித்தவர்கள் காமெடியனாக நடிப்பதும்... சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற காமெடி வேடத்தில் அறிமுகமான கருணாஸ், அதன் பிறகு காமெடியனாக பல படங்களில் நடித்தார். பிறகு திண்டுக்கல் சாரதி படத்தில் ஹீரோவானார். அதன் பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளைபுரம், மச்சான் என சில படங்கள் ஹீரோவாக நடித்து வந்தார். இவற்றில் பல படங்கள் இன்னும் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.
ஹீரோவாக பிசியாக இருந்தபோது இனி காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று சொன்னார் கருணாஸ். அவருக்கு ஹீரோ வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் காமெடியனாகிவிட்டார். விஷால் நடித்த கதகளி படத்தில் காமெடியனாக நடித்தவர், அடுத்து சந்தானம் ஹீரோவாக நடிக்கும் தில்லுக்கு துட்டு படத்திலும் நடிக்கிறார். தில்லுக்கு துட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சந்தானத்துக்கு நேற்று பிறந்தநாள். எனவே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார் கருணாஸ்.
நண்பேன்டா?