‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பீட்சா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் ரம்யா நம்பீசன். விஜய் சேதுபதி பற்றி அவர் கூறியதாவது: நான் எத்தனையோ நடிகர்களை பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி மாதிரி எளிமையான, இயல்பான நடிகரை பார்த்ததில்லை. பீட்சா படம் வந்தபோது அவர் பெரிய நடிகர் இல்லை. இப்போது அவர் உயரம் வேறு. ஆனாலும் பீட்சா படப்பிடிப்பில் எப்படிப்பட்ட விஜய் சேதுபதியை பார்த்தேனோ அதே மாதிரிதான் சேதுபதி படப்பிடிப்பிலும் பார்த்தேன். அதே எளிமை, அதே இனிமை. பீட்சா படம் முடிந்த பிறகு அவரிடமிருந்து எந்த போனும் இல்லை. எந்த சந்திப்பும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு மதுரையில் சேதுபதி படப்பிடிப்பில்தான் அவரை பார்த்தேன். ஒரு ஹாய். ஹலோவுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைக்கு தாய் கேரக்டர் என்றார் இயக்குனர். விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றால் அந்த படம் ஸ்பெஷலாகத்தான் இருக்கும் என்று நம்பி, எந்த நிபந்தனையும் இல்லாமல் நடிக்க ஒத்துக் கொண்டேன். அடுத்து அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்கிறார் ரம்யா நம்பீசன்.