Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக்டர் ஆன டாக்டர்

22 ஜன, 2016 - 10:07 IST
எழுத்தின் அளவு:
Doctor-turn-as-actor

டாக்டர்களுக்கு எப்போதுமே ஆக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கும்போலிருக்கிறது. டாக்டர் ராஜசேகரிலிருந்து உன்னை போல் ஒருவன் பரத் ரெட்டி வரை ஏராளமான டாக்டர்கள் நடிக்க வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வரும் இன்னொரு டாக்டர் பரத் விஜய். 'ஆறாம் அறிவு' என்ற படத்தில் நடித்திருப்பது மட்டுமல்ல தயாரிப்பு, இயக்கம் எல்லாமே அவர்தான். சஹானா ஹீரோயினாக நடித்துள்ளார். கார்த்திகேயன், கணேஷ் என்ற இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள், ஷியாம் எல்.ராஜ் இசை அமைத்துள்ளார். டாக்டர், ஆக்டர் ஆன கதையை சொல்கிறார் பரத் விஜய்.


"எங்க குடும்பமே டாக்டர் குடும்பம்தான். அதனால் பெற்றவர்கள் என்னை டாக்டருக்கு படிக்கச் சொன்னார்கள். அவர்கள் ஆசைக்கு டாக்டருக்கு படித்தேன். என் ஆசைக்கு ஆக்டர் ஆகிவிட்டேன். அதுவும் திடீரென்று ஆகவில்லை. முறைப்படி நடிப்பு, இயக்கம் கற்றேன். அதன் பிறகு மாடலாக இருந்தேன். கார்பரேட் விளம்பர படங்களில் நடித்தேன். குறும்படங்கள் இயக்கினேன். அதன் பிறகுதான் சினிமாவுக்கு வந்தேன். நான் புதுமுகம் என்னை நம்பி யாரும் பணம் போட்டு படம் எடுக்க மாட்டார்கள் என்று தெரியும். அதனால் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்.


மனிதனோட அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் அவனது ஆறாவது அறிவுதான். பேய் பிசாசும் ஆறாம் அறிவு சம்பந்தப்பட்டதுதான். மிருகங்களுக்கு பேய் பயம் இருக்கிறதா? இல்லை. காரணம் அதற்கு ஆறாவது அறிவு கிடையாது. இதை ஒரு கதை வழியாக சொல்கிற படம். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். திடீரென அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் இறந்து விடுகிறார். அதன் பிறகு மனைவியின் நடத்தையில் மாறுதல் தெரிய ஆரம்பிக்கிறது. இறப்புக்கும், மனைவி நடத்தை மாறுதலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லும் படம். என்கிறார் டாக்டர் பரத் விஜய்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in