எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
தமிழில் வெற்றியடைந்த பிறகு அடுத்த இலக்காக தெலுங்கு மார்கெட்டை குறிவைப்பார்கள் நம் ஹீரோக்கள். இதற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரும் விதிவிலக்கில்லை. இசையமைப்பாளராக இவர் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் பென்சில் இன்னும் வெளிவராமல் பெட்டிக்குள் கிடக்கிறது. அடுத்து நடித்த டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா படங்கள் வெளியாகி வெற்றியடைந்தன.
இந்நிலையில், விஜய் நடிப்பில் 'கத்தி' படத்தை தயாரித்த 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது ரஜினி நடிப்பில் '2.0' என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் லைகா இந்தப்படத்தையும் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்திற்கு 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த ஆனந்தி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் தெலுங்கில் 'நாகு இன்கோ பேருண்டி' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. 'நாகு இன்கோ பேருண்டி' என்றால் என்ன அர்த்தமாம்?'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' என்றுதான் அர்த்தம்.