இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
இந்தியத் திரையுலகில் தற்போதைய பிரபலமான நடிகைகளில் ஒருவரும் கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகமாக கூகுள் செய்யப்பட்ட நடிகையுமான சன்னிலியோனின் சமீபத்திய பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்காக எடுக்கப்பட்ட பேட்டி நிகழ்ச்சியில் சன்னி லியோனியிடம் பேட்டியாளர் கேட்ட கேள்விகள் திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. சன்னி லியோன் ஒரு 'போர்ன் நடிகை'யாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், அந்தப் பேட்டியில் அதைப் பற்றிய கேள்விகளே வெறுக்கத்தக்க அளவில் கேட்கப்பட்டதாக பல பாலிவுட் நட்சத்திரங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சன்னிலியோன் அந்தக் கேள்விகளை அழகாக எதிர் கொண்டு அதற்கு கோபப்படாமல் பொறுமையாக பதிலளித்திருந்த விதம் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பாராட்டும் அளவிற்கு அமைந்தது. சன்னிலியோனின் அந்த பதில்களைப் பாராட்டியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், சன்னிக்கு தனது ஆதரவுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். “வெல்டன் சன்னிலியோன். தவறான கருத்துக்களுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முகத்திற்கு நேராக பதிலளித்தீர்கள்,” என அவரைப் பாராட்டியுள்ளார்.
பாலிவுட் வட்டாரங்களில் தற்போது சன்னி லியோனின் பேட்டியும் அதற்கு அவர் அளித்த பதில்களும், சன்னிக்கு ஆதரவாக ஆமீர்கான் உட்பட பலர் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதும்தான் பரபரப்பாக உள்ளது.