சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கனிமொழியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு

Kushboo meets Kanimozhi at Delhi courtஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனி‌மொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது,  ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொ‌ழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்.

Tags »
Kushboo, meet, Kanimozhi, Delhi court,
Share  
Bookmark and Share

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Copyright © 2012 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in