ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி நடித்து, தயாரித்துள்ள, கெத்து திரைப்படத்துக்கு, கேளிக்கை வரி விலக்கு வழங்கக் கோரி, ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கின் விசாரணை, இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கெத்து திரைப்படம், ஜன.,14ம் தேதி திரைக்கு வந்தது. இந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு வழங்க மறுத்து, தமிழக வணிகவரித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, படத்தை தயாரித்த, ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு, கேளிக்கை வரி விலக்கு வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு, 2011ல் அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில், கெத்து படத்துக்கு வரி விலக்கு கோரி, ஜன., 11ல் விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன், பிரபல நடிகை எம்.என்.ராஜம், பின்னணி பாடகி வாணி ஜெயராம் உட்பட, ஆறு பேர் அடங்கிய குழு, படத்தின் தலைப்பான, கெத்து என்பது, தமிழ் அல்ல என்பதால், படத்துக்கு வரி விலக்கு வழங்கக் கூடாது என, பரிந்துரைத்தது. இதை ஏற்று, அரசும், எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து, ஜன., 14ல் உத்தரவிட்டது.
கெத்து என்ற சொல்லுக்கு, க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியில், தன் பெருமையை காட்டிக் கொள்ளும் போக்கு எனவும்; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம் தொகுத்த, கழக தமிழ் அகராதியில், தந்திரம் எனவும் அர்த்தம் கூறப்பட்டு உள்ளது. பட தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகன் என்பதால், அரசு, உள்நோக்கத்துடன் இந்த உத்த ரவை பிறப்பித்து உள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து, படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். மனு மீதான விசாரணை, இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.