பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'நானும் ரௌடிதான்'. தொடர்ச்சியாக தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு அந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. படம் ஆரம்பமான போதே தமிழில் முன்னணி நாயகியாக உள்ள நயன்தாரா விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், படம் வெளிவந்த பின் இருவருமே பொருத்தமான ஜோடியாகத் தெரிந்தார்கள். அந்தப் பொருத்தமும் படத்திற்கு வெற்றி கிடைக்க காரணமாக அமைந்தது.
இந்தப் படம் தெலுங்கில் 'நேனு ரௌடி னே' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 29ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் நயன்தாராவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகிறார்கள். தெலுங்கில் நயன்தாரா தான் தெரிந்த முகம் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தப் படம் அங்கு வெளிவந்து வெற்றி பெற்றால் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் டப்பிங் செய்யப்படுவது உறுதி.