ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த டிடேட்டர் திரைப்படம் சங்கராந்தி பண்டிகைக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கிய இப்படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார். பாலகிருஷ்ணாவின் அடுத்த படமான அவரது 100வது படத்திலும் நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றார். பொதுவாக வெற்றிக் கூட்டணியை படத்திற்கு படம் தொடரும் பாலகிருஷ்ணா சிம்ரன், நயன்தாராவுடன் தொடர்ந்து நடித்துள்ளார்.
தற்போது அந்த வரிசையில் அஞ்சலியும் இடம் பிடித்துள்ளார். இயக்குனர் சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா - மோகினி நடிப்பில் வெற்றி பெற்ற ஆதித்யா 369 என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை தனது 100வது படமாக மாற்ற பாலகிருஷ்ணா திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் நடிகை அஞ்சலியை நாயகியாக நடிக்க வைக்க பாலகிருஷ்ணா முடிவு செய்துள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.