'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பீப் பாடலால், பட்டி, தொட்டி எங்கும் சர்ச்சைக்கு உள்ளான நடிகர் சிம்புவுக்கு, இணையத்தில் மவுசு அதிகரித்து உள்ளது.பீப் பாடல் சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில், டைரக்டர் கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த, அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் பாடல் மூலம், சிம்புவுக்கு இணையத்தில் மவுசு அதிகரித்து உள்ளது. சிம்பு நடித்த இப்படத்தின், டிரைலர் புத்தாண்டு அன்று வெளியானது.
படத்தில் இடம் பெறும், தள்ளிப்போகாதே... பாடல், பொங்கல் பண்டிகை அன்று வெளியானது. படத்தின் இசை வெளியீட்டுக்கு முன், இப்பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. யூ - டியூப் இணைய தளத்தில், இந்த பாடலை, 30 மணி நேரத்தில், 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது, சிம்புவை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதை தன், டுவிட்டர் பக்கத்தில், அவர் பெருமையோடு குறிப்பிட்டு உள்ளார். அச்சம் என்பது மடமையடா படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் என்ற கேரள நடிகை நடித்துள்ளார்; மார்ச்சில் படம் வெளியாக உள்ளது.