மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
விஜயசேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக்கியவர் சீனுராமசாமி. அந்த படம் சூப்பர் ஹிட்டாகியது. அதையடுத்து இடம் பொருள் ஏவல் படத்தில் இணைந்தனர். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், தற்போது தர்மதுரை என்ற படத்தில் சீனுராமசாமியுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் விஜயசேதுபதி. இப்படத்தில் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மதுரையில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக 4 நடிகைகள் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ராதிகா, அம்மா வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் அவர்களின் அம்மா-மகன் செண்டிமென்ட் நடிப்பு பேசப்பட்டதால் மறுபடியும் இணைத்திருக்கிறார் சீனுராமசாமி. அதோடு, இப்படம் தென்மேற்கு பருவக்காற்று பாணியில் உருவாகி வருவதாகவும், அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கோலிவுட்டில் செய்திகள் உலகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இதுபற்றி அப்படக்குழுவை விசாரித்தபோது, தர்மதுரை முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகி வருகிறது. இதற்கும், தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் விஜயசேதுபதி ஒரு டாக்டராக நடிக்கிறார். கூடவே குடும்பப்பிரச்சினையிலும் சிக்கி தவிக்கும் வேடம். அந்த வகையில், இந்த படம் விஜயசேதுபதியை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லக்கூடியதாக அமையும் என்கிறார்கள்.