ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் இளம் ஹீரோவான ஷாகித் கபூர் தற்போது நடித்து வரும் படம் ரங்கூன். படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக்காட்சியில் ஷாகித்திற்கு விரலில் காயம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் மழையில் நனைந்து நடித்ததால் அவருக்கு கடும் காய்ச்சலும் வந்துவிட்டது. இதனால், விஷாய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ரங்கூன் படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், ராணுவ வீரனாக ஷாகித் கபூர் நடித்து வருகிறார். கதநாயகியாக கங்கனா ரனாவத்தும், முக்கிய கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடித்து வருகின்றனர்.
ஜப்பானைச் சேர்ந்த ஸ்டன்ட் நடிகர்களுடன் போர்க்காட்சியில் நடித்த போது தான் ஷாகித்திற்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும், சில ஜப்பானிய நடிகர்களுக்கும் காயம் ஏற்ப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஷாகித் கபூர் மீண்டும் நடிப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.