600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பிரபல இந்தி நடிகர் கபீர் பெடி. 70 வயதாகும் அவர் இப்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். 1971ம் ஆண்டு அறிமுகமான கபீர் பெடி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் ஏற்கெனவே ஒடிசி நடன கலைஞர் புரோத்திமாவை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்து விட்டு ஆடை வடிவமைப்பாளர் சூசன் ஹம்ப்ரீசை 2வதாக திருமணம் செய்தார். இவரையும் விவாகரத்து செய்து விட்டு சின்னத்திரை தொகுப்பாளினி நிக்கி பெடியை திருமணம் செய்தார். பின்பு அவரையும் பிரிந்தார்.
அதன் பிறகு பர்வீன் துசாஞ்சை என்வரை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தனது 70வது பிறந்த நாள் விழாவுக்கு தன் நண்பர்கள், உறவினர்களை அழைத்திருந்தார். பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி விட்டு பர்வீன் துசாஞ்சை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். அந்த நிகழ்ச்சியிலேயே தாலி கட்டி திருமணமும் செய்து கொண்டார். 40 வது வயதில் 4வது திருமணம் செய்து கொண்ட கபீர் பெடியை ஆச்சர்யத்துடன் பார்க்கிறது பாலிவுட்.