கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
மொகஞ்ச தரோ படப்பிடிப்பின் போது நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாம். ஆக்ஷன் சீன் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த ஹிருத்திற்கிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராக்கேஷ் ரோஷன் கூறுகையில், ஹிருத்திக் ரோஷனுக்கு காயம் ஏற்பட்டது உண்மை தான். அவர் 4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறி உள்ளனர். ஹிருத்திற்கு காயம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் வொர்க்அட் செய்யும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது என்றார். ஹிருத்திக் ரோஷன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மொகஞ்ச தரோ படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ம் தேதி, நீரஜ் பாண்டேவின் ருஸ்தம் படத்துடன் ரிலீசாக உள்ளது.