Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை! -நடிகர் சத்யன்

18 ஜன, 2016 - 13:47 IST
எழுத்தின் அளவு:
Actor-Sathyan-interview

இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற படங்களில் நாயகனாக சினிமாவில் அறிமுகமானவர் சத்யன். அந்த படங்களில் அவருக்கு ஜோடியாக அப்போது பிரபலமாக இருந்த சுபலட்சுமி, கெளசல்யா போன்ற நடிகைகள் நடித்தனர். அதன்பிறகு காமெடிக்கு மாறிவிட்ட சத்யன், மன்மதன், கோயில், தேவதையைக்கண்டேன், மாயாவி, கஜினி, சச்சின், கிரீடம், நண்பன், வேட்டைக்காரன், துப்பாக்கி, ரெளத்திரம், புலி என சுமார் 60 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் பெரும்பாலும் காமெடியனாகவே நடித்துள்ள சத்யன், அடுத்தபடியாக குணசித்ர வேடங்கள் பக்கமும் திரும்பியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் கதாநாயகனாக நடித்த நான் பின்னர் காமெடியனாக ஒரு ரூட்டை பிடித்தேன். என்றாலும் சில படங்களில் குணசித்ர வேடங்களிலும் நடித்தேன். ஆனபோதும் மார்க்கெட்டில் நான் காமெடியனாகவே நிற்கிறேன். மேலும், நண்பன், துப்பாக்கி உள்ளிட்ட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள். இதில் நண்பனில் காமெடியாகவே வில்லத்தனம் செய்தேன். அது பேசப்பட்டது. அதேமாதிரி துப்பாக்கியில் விஜய்யின் நண்பனாக நடித்த நான், குணசித்ரமும் கலந்து நடித்தேன். அதில் க்ளைமாக்சில் நான் பேசும் டயலாக்குகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


அதோடு, குணசித்ர வேடங்களிலும் நம்மால் ஸ்கோர் பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனால் இப்போது குணசித்ர வேடங்களிலும் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன். இப்போது நான் சூர்யாவுடன் 24 படத்தில் ப்ரண்டாகவும், விக்ரம் பிரபுவுடன் வாஹா படத்தில் அவரது அண்ணனாகவும் நடித்திருக்கிறேன். இதில் 24 படத்தில் குறைவான நேரமே நான் வந்தபோதும் நல்ல அழுத்தமான காட்சிகளில் நடித்திருக்கிறேன். அதேபோல் வாஹாவில் செண்டிமென்ட் கலந்த அண்ணனாக நடித்துள்ளேன். ஆக, இந்த படங்கள் எனக்கு புதிய இமேஜை உருவாக்கும். இதையடுத்து காமெடி என்கிற வட்டத்திற்குள் மட்டுமே சிக்கிக்கொள்ளாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் சத்யன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in