பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மும்பை நடிகையான காஜல்அகர்வால் இந்தி படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். என்றாலும், தமிழ், தெலுங்கு படங்கள்தான் அவருக்கு ஒர்க்அவுட்டானது. இங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக இப்போது வரை நடித்து வருகிறார் காஜல். இருப்பினும், தாய்மொழியான இந்தி சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்கவேண்டும் என்பதுதான் அவரது நீணடகால டார்கெட்டாக இருந்து வருகிறது. அதனால், அங்கு கிடைக்கிற படங்களில் நடித்துக்கொண்டே மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதற்காக தொடர்ந்து கல்லெறிந்து வருகிறார் காஜல்அகர்வால்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாலிவுட் பிலிம்பேர் விருது விழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது இதுவரையில்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக உடையணிந்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் இழுத்திருக்கிறார். இதற்கு முன்பு எந்தவொரு பாலிவுட் நடிகைகளும்கூட இந்த அளவுக்கு படுகவர்ச்சியான உடைகளில் மேடையேறியதில்லையாம். அதைப்பார்த்து பாலிவுட் திரையுலகமே பதறிப்போனதாம். அந்த புகைப்படங்கள் இப்போது இணையதளங்களில் பரவி தென்னிந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு, வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.