Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலட்சுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

17 ஜன, 2016 - 14:14 IST
எழுத்தின் அளவு:
Lot-of-praises-for-varalakshmi

தமிழ்த் திரையுலகத்தில் வாரிசு நடிகர், நடிகைகளுக்குப் பஞ்சமேயில்லை. பல முன்னாள், இந்நாள் நாயகன், நாயகிகள் வாரிசுகள் பலரும் திரையுலகத்தில் நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ, இயக்குனர்களாகவோ இருந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே முன்னணியில் இருக்கிறார்கள், பலர் பின்னணியில்தான் இருக்கிறார்கள். சரியான வாய்ப்புகள் அவர்களைத் தேடி வராததால் அவர்களில் திறமையுள்ள பலரும் இன்னும் பெயர் வாங்காமலே இருக்கிறார்கள். அப்படி ஒருவராக இருந்த வரலட்சுமி 'தாரை தப்பட்டை' படத்தில் சூறாவளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது தன்னைப் பற்றி அதிகம் பேச வைத்திருக்கிறார்.

பொதுவாக பாலா படங்களில் நடிக்கும் நாயகர்கள்தான் அதிகம் பேசப்படுவார்கள். நாயகிகள் சிறப்பாக நடித்திருந்தாலும் நாயகர்களின் நடிப்பு முன்னால் அவர்களின் நடிப்பு எடுபடாமல் போய் விடும். முதன் முறையாக 'தாரை தப்பட்டை' படத்தில் நாயகனான சசிகுமாரின் நடிப்பை விட வரலட்சுமியின் நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.


ஒரு கரகாட்டக்காரராக எந்த விதமான கூச்சமும் இல்லாமல் கிளாமரான ஆடை அணிவதிலிருந்து, கொஞ்சம் ஆபாசமான நடனம் ஆடுவது வரை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் வரலட்சமி. நிஜ ஆட்டக்காரர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு வரலட்சுமியின் நடிப்பு அமைந்துள்ளதாக பொதுவான பாராட்டு வரலட்சுமிக்குக் கிடைத்து வருகிறது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமியைப் பாராட்டி வருகிறார்கள். இளையராஜாவின் இசையைத் தாண்டி 'தாரை தப்பட்டை' படத்தில் வரலட்சுமியின் நடிப்பு மட்டுமே பலரையும் கவர்ந்த விஷயமாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in