தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் தலைப்புகளுக்கான பஞ்சம் கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. வரி விலக்குதான் அதற்கு முக்கியக் காரணம் என்பது சாதாரண ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் தங்களது படங்களுக்குப் பொருத்தமான தலைப்பு வைக்க முடியாமல் பலர் திணறிக் கொண்டுதானிருக்கிறார்கள். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கூட அவர்களது படங்களுக்கு தலைப்பே வைக்காமல் படப்பிடிப்பு நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால், பலர் பழைய படங்களின் தலைப்புகளைக் கொஞ்சமும் யோசிக்காமல் தங்களது படங்களுக்கு வைத்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் பட டைட்டில் வைப்பதுதான் பலருக்கும் பழைய டைட்டிலை வைப்பதில் ஒரு ஃபேஷன் இருக்கிறது. எப்படியும் ரஜினிகாந்த் அளவிற்கு வசூல் நாயகனாக ஆக முடியாது, அவரது பெயரை வைத்தாவது அவர் பெற்ற ரசிகர்களில் கொஞ்சம் பேரை நாம் பிடிக்க மாட்டோமா என்றுதான் அவர்கள் அப்படி வைத்து வருகிறார்கள் என கோலிவுட்டிலேயே கிண்டலடிக்கிறார்கள்.
தற்போது ஜீவா நடிக்க 'போக்கிரி ராஜா', விஜய் சேதுபதி நடிக்க 'தர்மதுரை' ஆகிய ரஜினி பட தலைப்புகள் கொண்ட படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடையில் 'வீரா' என்ற படத்தையும் அறிவித்தார்கள், ஆனால், அந்தப் படத்தின் சத்தத்தையே காணோம்.
இப்போது உதயநிதியும் அவருடைய புதிய படத்திற்கு 'மனிதன்' என்ற ரஜினி பட தலைப்பை வைத்திருக்கிறார். ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஜாலி எல்எல்பி' படத்தின் ரீமேக்காக இந்தப் படம் ஆரம்பமாகி முடிவடையும் கட்டத்தில் உள்ளது. வழக்கம் போலவே படத்திற்குப் பொருத்தமான தலைப்பு, படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் அனுமதி பெற்று இந்தத் தலைப்பை வைத்துள்ளோம் என்று விளக்கமும் பின்னாடியே வரும்.